‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ நூலுக்கான மோனிகாவின் மதிப்புரை

எனது ‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ நூலுக்கான மோனிகாவின் மதிப்புரையை ‘வார்த்தை’ மே 2008 இதழில் படித்தேன். முதலில் அதற்கு ஒரு நன்றி.
“இந்திய ஓவியங்களுக்கு சிற்பக்கலை கட்டடக்கலையைப்போல் ஒரு பெரும் கவனிப்பு இல்லையே என்ற ஆசிரியரின் கரிசனம் புரிகிறது. என்றாலும், ஓவியங்களைப் பற்றி ஏராளமான ஆய்வுகள் நடந்துவிட்ட இந்த சூழ்நிலையில் இந்த நூல் இன்னும் கூட ஆழமானதாக இருந்திருக்கலாம். விரிவான ஆய்வும் விவாதங்களும் ஆசிரியர் தருவித் திருந்தால் அது ஒரு செய்திக்கோர்வை என்ற அடையாளத்திலிருந்து விடு பட்டிருக்கும் [...]

அரவக்கோனின் ‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ – ஒரு விமர்சனப் பார்வை

மேற்கத்திய கலைப் பாணிகளான இம்ப்ரஷனிசம், எக்ஸ்ப்ரஷனிசம் போன்றவை பற்றித் தெரிந்த அளவுக்கு நம்மில் பலருக்கு நமது பாரம்பரிய கலைகள் பற்றித் தெரிவதில்லை. காரணம் அவை அந்தந்த வட்டாரத்தை விட்டு வெளிச்செல்லும்போது அருங்காட்சியகங்களிலும் மேல்தட்டு மக்களின் வீடுகளிலும் (தஞ்சாவூர் ஓவியங்கள்) ஆடைகளிலும் (கலம் காரி ஓவியங்கள்) சுவர்களிலும் மட்டுமே இடம் பெறுகின்றன. அதற்கு முக்கியமானதொரு காரணம் உலகமயமாதலில் அவை பண்டங்களாக்கப்பட்டுவிட்டதுதான். இத்தகைய சூழலில் அரவக்கோனின் நூல் வெளிவந்துள்ளது.
கலைகள், கிராமியக் கலைகள் (நாட்டுப்புறக் கலைகள் / folk art) என்றும் [...]