வரலாறு, வரலாறு எழுதுதல் என்பவை தொன்று தொட்ட காலமாகவே இருந்து வருகின்றனவா? வரலாறு எழுத்து வடிவம் பெறுவதற்கு முன் நமது பேச்சுவழி கலாச்சாரங்களில் இருந்தமை நாட்டாற்கலைகள் மூலமாகவும், கல்வெட்டுக்கள் மூலமாகவும் இதர பல இசை நாடகங்கள், பாடல் மற்றும் ஓவியங்களின் வழி கண்டறியப்படலாம். குகைகளில் வாழ்ந்த காலம் முதலாகவே மனிதன் தனது தினசரி நிகழ்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் ஆகியவற்றை குகைகளில் தீட்டத்தொடங்கிவிட்டான். அப்படி இருக்கையில் மனிதர்கள் தன் வரலாறு கூறுதல் என்ற அளவிலேயே அது கூறப்படும் மொழி, [...]
