Thursday September 23, 2004
நன்றி: திண்ணை
கடந்த செப்டம்பர் 10ம் தேதி திண்ணை இதழில் வெளியான சி.மதிவாணனின் கட்டுரை என்னை எனது சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளத் தூண்டியமையால், சில எண்ணங்கள்.
பெண்ணை/பெண்ணுடலை கற்பு, தாய்மை போன்ற கட்டமைப்புகளுக்குட்படுத்துவதுடன் பெண்ணை தெய்வமாகக் கருதுதல், ஆண்களுக்கு நிகராக மதியாமல் சிறப்பு சலுகைகளும் அங்கீகாரங்களையும் அளித்தல், அழகியல் கட்டுமானங்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாகப் பெண்ணை பாவித்தல் போன்ற பார்வைகளும்கூட பெண்களை ஒரு சாதாரண தளத்தில் இயங்கவிடாமல் தனிமைப்படுத்துவதற்கான (alienation) ஒரு உத்தியாகவே பார்க்க வேண்டும். ‘உங்களுடைய [...]
ஜனவரி 1,2008
பகுப்புகள்: கட்டுரைகள் . . பதிவர் : monikhaa . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
பிரான்சிலுள்ள ‘சயன்ஸ்போ’(science po) என்ற நிறுவனத்தைச் சார்ந்த ஆய்வாளர் கிரிஸ்டோஃபே ஜெபஃர்லோ(Christophe Jaffrelot:Hindu Nationalism-A Reader) தனது ஆய்வில் இந்தியாவிலேயே தொடர்ந்து பார்ப்பனர்கள் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற பதவி வகிப்பது கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும்தான் என்கிறார்.
மார்க்ஸியத்தின் மாபெரும் விசுவாசிகளெனப் பறை சாற்றும் கேரள மக்களின் மண்ணில் கடந்த பல மாதங்களாக தலித்துகளும் ஆதிவாசிகளும் ‘செங்கரா’வில் தமது நிலங்களை இழந்து பல்வகை கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது பற்றி அவ்வப்போது ஆங்கிலப் பத்திரிக்கைகள் வெளியிட்டபோதும் பல தன்னார்வக் குழுக்கள் [...]
ஜனவரி 1,2008
பகுப்புகள்: Uncategorized . . பதிவர் : monikhaa . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்
கிட்டத்தட்ட கடந்த ஒரு மாத காலமாக இந்த நியூயார்க் நகரின் குளிரின் நடுவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு உயரமான கட்டிடத்தின் வேலைகளை நான் கண்காணித்து வருகிறேன். அவ்வப்போது பெய்யும் பனி, பேய்க்காற்று, ரத்தத்தை உறையச் செய்யும் பூச்சியத்திற்கும் குறைவான வெப்பநிலை இவற்றிடையில் தொடந்து தங்களது வேலைகளை துரிதமாக செய்து கொண்டிருக்கும் வேலையாட்களை பார்க்கையில் ஒருபுறம் பரிதாபமும் மறுபுறம் அவர்கள் பயன்படுத்திய தூக்கிகள் போன்ற இயந்திரங்களைக் கண்டு வியப்பும் மேலிட்டது. இரண்டு நாட்களுக்கொரு மாடி என கிட்டத்தட்ட முப்பது [...]
ஜனவரி 1,2008
பகுப்புகள்: கட்டுரைகள் . . பதிவர் : monikhaa . மறுமொழிகள்:
கருத்துத் தெரிவிக்கவும்